வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நிறுவனமும் ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
Most anticipated update is here!
Director #VetriMaaran ‘s #ViduthalaiPart2 First Look launch tomorrow @ 11:30 AM. StayTuned
An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre #Kishore @menongautham @DirRajivMenon… pic.twitter.com/4Pk9kfAYz3
— RS Infotainment (@rsinfotainment) July 16, 2024
அதேசமயம் இப்படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை (ஜூலை 17) காலை 11.30 மணியளவில் வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரில் உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் என்ற திருக்குறள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.