Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

-

ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?!

நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக இறைவன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அதைத்தொடர்ந்து ஜீனி, காதலிக்க நேரமில்லை என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெயம் ரவி. இதற்கிடையில் ஜெயம் ரவி, எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விவேகானந்த் சந்தோஷம் படத்திற்கு ஒளி பதிவு செய்துள்ளார். இந்த படமானது அக்கா – தம்பி உறவு முறையை மையமாக வைத்து குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவை பட குழுவினர் வெளியிட்டிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஜீ தமிழ் மற்றும் ஜீ5 தமிழ் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்திருந்தனர். ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?மேலும் இந்த படத்தின் முதல் பாடலான மக்காமிஷி எனும் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரதர் திரைப்படம் 2024 செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ