Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை -...

இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை – சசிகலா குற்றச்சாட்டு

-

இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை சசிகலா குற்றச்சாட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் சசிகலா அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசியில் தொடங்கிய இந்த பயணம் இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் வழியாக பாவூர்சத்திரம் வந்தடைந்தது. இதில் பேசிய அவர் “தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. அரசிடம் பணம் இல்லாததால் மக்களிடம் வரியை வசூலிக்கின்றனர். அரசிடம் பணம் இல்லாததால் பைக்கில் செல்பவர்களிடம் 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுனு சொல்லி தொந்தரவு செய்கிறார்கள். இதெல்லாம் ஜெயலலிதா இருந்தபோது நடக்கவில்லை. ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை.

பல இடங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. இந்த அரசிடம் திட்டமிடல் சரியாக இல்லை. குளம், குட்டைகளை தூர்வாரவில்லை. ஜெயலலிதா எந்த வெளிநாடும் போனது கிடையாது. ஆனால் இன்றைய முதல்வர் பல முறை வெளிநாடு செல்கிறார். நீங்க யார் கிட்ட வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.. ஆனால் என்கிட்ட முடியாது” என இவ்வாறு பேசினார்.

MUST READ