சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களாக புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பட குழுவினர் அறிவித்தனர். அதன்படி சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படமானது 2024 அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து நட்டி நட்ராஜ், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஏற்படும் பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் முன்னோட்ட வீடியோவும் டீசரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில் அடுத்ததாக சூர்யாவின் 49 ஆவது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில்
கங்குவா திரைப்படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் – FIRE SONG வருகின்ற ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.