Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைகிறது 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படக் கூட்டணி!

மீண்டும் இணைகிறது ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படக் கூட்டணி!

-

- Advertisement -

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மீண்டும் இணைகிறது 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படக் கூட்டணி!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருந்த மகாராஜா எனும் திரைப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதேசமயம் விஜய் சேதுபதி மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வெற்றி பட இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் இணைகிறது 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படக் கூட்டணி!அது மட்டும் இல்லாமல் இயக்குனர் அட்லீ இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் ஏற்கனவே வெளியான சீதக்காதி திரைப்படத்திலும் இந்த கூட்டணி இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ