Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் அறிமுகமாகும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' பட இயக்குனர்!

தெலுங்கில் அறிமுகமாகும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ பட இயக்குனர்!

-

கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி மலையாள மொழியில் வெளியான திரைப்படம் தான் மஞ்சும்மெல் பாய்ஸ். தெலுங்கில் அறிமுகமாகும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' பட இயக்குனர்!இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்கியிருந்தார். கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் கேரளாவை தாண்டி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஏகபோக வரவேற்பை பெற்றது. குறுகிய நாட்களிலேயே கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்ற இந்த படம் இன்றுவரையிலும் பேசப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் சிதம்பரம் அடுத்ததாக என்ன படம் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி ஏற்கனவே நடிகர் தனுஷ், சிதம்பரத்துடன் கைகோர்க்கப் போவதாக செய்திகள் வெளியானது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் சிதம்பரம், இந்தி மொழியில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அதனை பாந்த்தோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. தெலுங்கில் அறிமுகமாகும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' பட இயக்குனர்!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இயக்குனர் சிதம்பரம் தெலுங்கு மொழியில் அறிமுகமாக உள்ளாராம். இவர் இயக்க உள்ள புதிய படத்தை பிரபல நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ