Homeசெய்திகள்சினிமாரிலீஸ் தேதியை லாக் செய்த விக்ரமின் 'தங்கலான்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரிலீஸ் தேதியை லாக் செய்த விக்ரமின் ‘தங்கலான்’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரிலீஸ் தேதியை லாக் செய்த விக்ரமின் 'தங்கலான்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்க ஸ்டுடியோ கிரேன் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். இதில் டேனியல் கால்டகிரோன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்
ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கிஷோர் குமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஆர் கே செல்வா இதன் எடிட்டிங் பணிகளை கவனித்திருக்கிறார்.ரிலீஸ் தேதி லாக் செய்த விக்ரமின் 'தங்கலான்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விக்ரம், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதுதான எதிர்பார்ப்பு அதிகப்படுத்தியது. அடுத்ததாக சமீபத்தில் படத்தின் முதல் பாடலையும் பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே வெளியான தகவலின்படி தங்கலான் திரைப்படம் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ