Homeசெய்திகள்தமிழ்நாடுதண்டையார்பேட்டை- மழை நீர் வழித்தடம், பூங்கா அமைக்க ஆய்வு

தண்டையார்பேட்டை- மழை நீர் வழித்தடம், பூங்கா அமைக்க ஆய்வு

-

சென்னை தண்டையார்பேட்டை ரயில்வே தண்டவாளம் பகுதியில் மழை நீர் செல்வதற்கு இடையூறாக ஆக்கிரமிபபு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் புதர்களை அகற்ற ரயில்வே துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

தண்டையார்பேட்டை- மழை நீர் வழித்தடம், பூங்கா அமைக்க ஆய்வுமழைக்காலங்களில் சாலையில் மழை நீர் தேங்காமல் தடையின்றி மழை நீர் பக்கிங் காம் கால்வாயில் செல்ல நடவடிக்கை. தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட 40, 41, 42, ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் செல்வதற்காக வழித்தடம் உள்ளது.

இந்த வழித்தடம் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் தண்டையார்பேட்டை இளைய தெரு, கருணாநிதி  நகர், தமிழன் நகர், நேரு நகர், கொருக்குப்பேட்டை, கண்ணன் தெரு, சேனியம்மன் கோவில்  தெரு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழை நீர் செல்லும் இடங்களில் ஆங்காங்கே மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா சென்னை மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தென்னக ரயில்வே கோட்ட பொறியாளர் விக்காஸ் யாதவ் மற்றும் அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி கொருக்குப்பேட்டை கண்ணன் தெரு ரயில்வே கிளாசிக் பகுதியில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய் தூர்வாரவும் அதனை உயர்த்தி அமைக்கவும் ஆய்வு செய்தனர், அதேபோல் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் புதர் மண்டி உள்ளது  இதனை அகற்றவும் அதிகாரிகளிடம் கூறினர்.

தண்டையார்பேட்டை நேரு நகர் எண்ணூர் நெடுஞ்சாலை பகுதி  உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவது குறித்தும் அங்கு உள்ள கால்வாயை சரி செய்வது குறித்தும் ஆய்வு செய்தனர், புது வண்ணாரப்பேட்டை இந்திரா காந்தி நகர், வ உ சி நகர், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி  மழைக்காலங்களில் தடை இன்றி மழை நீர் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கூறினர் .

அதேபோல் தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகர் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு  செல்லும் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி கால்வாயை சீரமைப்பது மற்றும் தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையம் அமைப்பது குறித்தும் ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது

அதை தொடர்ந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணூர் நெடுஞ்சாலையில் ரயில்வேக்கு சொந்தமான காலியாக உள்ள குளத்தை  ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து வாங்கி மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது .

இந்த ஆய்வில் மூலம் வரும் மழைக்காலங்களில் மழை நீர் 40 வது வட்டம் 41வது வட்டம் 42 வது வட்டம் 38 வது வட்டம் ஆகிய பகுதிகளில் முறையாக பக்கிங் காம் கால்வாயில் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

MUST READ