Homeசெய்திகள்கட்டுரைஉண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்து தான்!

உண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்து தான்!

-

- Advertisement -

ம.தொல்காப்பியன்

ஒரு பெண்ணை சந்திக்க வாய்ப்பே இல்லாத வேளையில், வாய்க்கவே வாய்க்காத ஓர் பேரழகி ஒருவனிடம் வந்து தன் காதல் வாக்கு மூலத்தை கொடுக்கும்போது அவனுடைய மன நிலை எப்படி இருக்கும்?உண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்துதான்!

அவளை பேரழகி என்று வர்ணிப்பது கூட சற்று குறைவானதாகத்தான் இருக்குமோ? பேரழகி என்றால் அவளுக்கு நிகரான இன்னும் பல அழகிகள் இருக்கிறார்கள் என்ற பொருள் வருகிறதே!

ஆனால் அவளோ நிகர் சொல்ல முடியாதவள் ஆயிற்றே! தன் வாழ்வில் ஒரு பெண்ணின் அன்பு வந்து சேராதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் ஒருவனிடம் ஒரு பெண், அதுவும் அழகி, அதுவும் பேரழகி வந்து காதலைச் சொன்னால்…?அவள் உலக அழகியாகவும் இருந்து விட்டால்…?

இயக்குநர் இந்த சூழலைச் சொல்லி கவிஞரிடம் பாடல் வரிகளைக் கேட்கிறார். யாரிடம்… வைரமுத்துவிடம்! வாய்ப்பை விடுவாரா வைரமுத்து!

நாயகன் பிரசாந்த். ஆனால் நாயகி?உண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்துதான்!

ஐஸ்வர்யா ராய்! ஓர் உலக அழகியின் காதல் கிடைக்கும்போது நாயகனின் மன நிலை எப்படி இருக்கும்!

சாக்லேட் வாங்கிக் கொடுங்க என்று சதா நச்சரிக்கும் ஒரு குழந்தையிடம் திடீரென அப்பா ஒரு சாக்லேட் பாரையே கொண்டு வந்து கொடுக்கும் போது அந்த குழந்தை சட்டென கேட்கும், “டாடி இது எனக்குதானே? எனக்கு மட்டும்தானே? எனக்கே எனக்குதானே?”

இந்த குழந்தையின் மன நிலையில் இருந்து ஆரம்பிக்கிறார், கவிஞர்! கவிஞன் நாயகனாக மாறி, குழந்தையின் ஆசைத் துடிப்புக்களைப் பெற்று இப்படி கேட்கிறார்,

“எனக்கே எனக்கா….
நீ எனக்கே எனக்கா…!!!”உண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்துதான்!

அடுத்த வரிகளைப் பாருங்கள்,

“ஃபிஃப்ட்டி கேஜி தாஜுமகால்
எனக்கே எனக்கா
ஃபாக்ஸில் வந்த நந்தவனம்
எனக்கே எனக்கா…

‘ஃபிஃப்ட்டி’ என்பதும் ‘கேஜி’ என்பதும் சாதாரண வார்த்தைகள். தாஜ்மகால் என்பதும் ஓர் அதிசயத்தைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவுதான். அதே போலத்தான் ஃபாக்ஸ், நந்தவனம் என்பனவும்!

ஆனால்,

இந்த மூன்று வார்த்தைகளையும் வரிசைப் படுத்தி ஒரு வரியை உருவாக்கும்போது அதற்குள் ஓர் உருவம் வந்து விடுகிறது. ஆம்! உலக அழகி ஐஸ்வர்யா ராயையே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அதுதான் கவிஞனின் வித்தை!

யார் ஐஸ்வர்யா? அவள் ஃபாக்சில் வந்த நந்தவனம்; அவள் ஃபிஃப்ட்டி கேஜி தாஜுமகால்! ப்பா….!!! நாயகன் கடவுளைப் பார்த்து கேட்கிறானா இல்லை தன்னிடமே கேட்டுக் கொள்கிறனா?உண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்துதான்!

“எனக்கே எனக்கா?
நீ எனக்கே எனக்கா…

அதிரசத்தைத் தின்னத் துடிக்கும் குழந்தையின் ஆவல் தெரிகிறதா!!!

கவிஞன் குசும்பன். பாடலை எழுதச் சொன்னால் பாடும் காதலனாகவே மாறி விடுகிறான். அந்த உலக அழகி தன்னிடமே வந்து காதலைச் சொன்னதைப் போல மனத் துள்ளல்களை, உணர்ச்சித் துடிப்புக்களைப் பெற்று விடுகிறான். அவளையும் அவளது அழகையும் அடுக்கத் தொடங்கி விடுகிறான் கவிஞன்!

ஐஸ்வர்யா ராயை வைரமுத்து வருணித்ததைப் போல உலகில் வேறு எந்த கவிஞனும் வருணித்திருக்க முடியாது!

பாக்கெட் சைசில் வெண்ணிலவு
எனக்கே எனக்கா
ஃபாக்சில் வந்த பெண் கவிதை
எனக்கே எனக்கா…

கவிதை என்றாலே அழகுதான். அதிலும் பெண் கவிதை என்றால் ம்ம்ம்….!!!

எப்படி தின்னலாம் என்று, ஆசைகொண்ட பிள்ளை நினைப்பதைப் போல யோசிக்கிறான் காதலன்,

உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமாஉண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்துதான்!

அடுத்து இன்பச் சுற்றுலா…

அன்பே இருவரும் பொடி நடையாக
அமெரிக்காவை வலம் வருவோம்
கடல் மேல் சிவப்பு கம்பளம் விரித்து
ஐரோப்பாவில் குடி புகுவோம்

ம்ஹூம்… சுத்தினதும் போதாது. அதை, அந்தக் கவிஞனை அழைத்து பத்திரப் பதிவு செய்து வைக்க வேண்டும். சாதா கவிஞனை அல்ல. செத்துப் புதையுண்ட சுத்தக் கவிஞர்களை…

இதோ…

நம் காதலை
கவி பாடவே
ஷெல்லியின் பைரனின்
கல்லறை தூக்குத்தை கலைத்திடுவோம்

இப்போது காதல்பித்துப் பிடித்த காதலனின் மன நிலையை பார்த்து காதலி அஞ்சுகிறாள்,

விண்ணைத் தாண்டி நீ
வெளியே குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ
காற்றைக் கடிக்கிறாய்
பிள்ளை மனம் பித்தானதோ
என்னாகுமோ ஏதாகுமோஉண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்துதான்!

உங்கள் இவனோ…

அய்யோ! காதல் இந்த பிறவியோடு, இந்த யுகத்தோடு தீர்ந்து விடுமோ என்ற அச்சத்துக்கு காதலன் வருகிறான்,

வாடை காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடியுகம் போனாலுமே
காதலுக்கு எப்போதும் வயசாகாது

சரி! அது இருக்கட்டும்!! அவன் தன் காதலை சொன்னபோது அவளுக்கு எப்படி இருந்ததாம் தெரியுமா?

செர்ரி பூக்களை திருடும் காற்று
காதில் சொன்னது ஐ லவ் யூ
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை
என்னிடம் சொன்னது ஐ லவ் யூ
உன் காதலை
நீ சொன்னதும்
தென்றலும் பறவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே…!

கவிஞனுக்குள் காதல் வந்து
அவனும் பிதற்றுகிறான்,

ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது
உன் கூந்தலில் நின்றாடத்தான்
பூமாலையே பூச்சசூடவா
சிந்தும் மழைத் துளி மண்ணில் விழுவது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

காதலனின் போதைச் சொற்களைக் கேட்டு, அவள் உன்மத்த நிலையை எட்டுகிறாள். அது பயமாக மாறுகிறது,

இதயம் துடிப்பது நின்றாலும்
இரண்டோர் நிமிடம் உயிரிருக்கும்
அன்பே என்னை
நீ நீங்கினால்
ஒரு கணம் என்னுயிர் தாங்காது

ஓ… ஒரு கவிஞன் ஒரு காதலையும் அதன் பாடலையும் எப்படி ஜீவிக்க வைக்கிறான் பாருங்கள்!

வக்காளி நீதாண்டா கவிஞன்!!!

MUST READ