கவின், நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் கவின் கிஸ், மாஸ்க், ப்ளடி பெக்கர் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் தான் நடிகர் கவின், நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ரொமான்டிக் காதல் கதை களத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தை விஷ்ணு எடாவன் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்க லியோன் பிரிட்டோ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். பிலியோமின் ராஜ் இதன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.
Nandri Arohara ❤️ For my Nayanthara maam ❤️ and My Kavin Anna❤️
The journey Begins today ❤️
Romba romba Nandri Lalith sir🫶🏼@NayantharaU @Kavin_m_0431 @JenMartinmusic @leonbritto1 @brindagopal @7screenstudio @kavya_sriram @kabilanchelliah and many more wonderful people ❤️ pic.twitter.com/dICshe9bwg— Vishnu Edavan (@VishnuEdavan1) July 22, 2024
ஏற்கனவே இந்த படம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியான நிலையில் நேற்று (ஜூலை 22) இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கவின், நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.