விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பா ரஞ்சித் இயக்கியுள்ளார். இதில் விக்ரம் தவிர பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து எமோஷனல் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து டிரைலரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் படத்தின் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. அதேசமயம் தங்கலான் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்படும் என படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Team #thangalaan … 🔥🔥🔥 @chiyaan @StudioGreen2 @parvatweets @MalavikaM_ @beemji pic.twitter.com/0nm5t3m869
— G.V.Prakash Kumar (@gvprakash) July 23, 2024
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை படக்குழுவினர் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கு சென்று தங்கலான் திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்ய இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.