கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இதில் அருள்நிதியுடன் இணைந்து ரமேஷ் திலக், சனந்த், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹாரர் திரில்லர் கதை கழுத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அருள்நிதி, அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும் இணைந்து டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் உருவாகியுள்ளனர். இந்த படத்தில் அருள் நிதி, பிரியா பவானி சங்கர், விஜய் அர்ச்சனா, அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டிலேயே படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இதன் ட்ரெய்லரும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் துறைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. எனவே படக்குழுவினர் (ஜூலை 24) இன்று படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Get ready to enter the darkness ⚫#DemonteColony2 – Important announcement tomorrow morning at 10.05AM followed by the release trailer at 5.01PM.@BTGUniversal @RedGiantMovies_ @arulnithitamil @bbobby @ManojBeno @AjayGnanamuthu @priya_Bshankar @SamCSmusic @proyuvraaj… pic.twitter.com/QhEOOh1DEg
— BTG Universal (@BTGUniversal) July 23, 2024
அதன்படி மாலை 5.01 மணியளவில் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது. மேலும் இன்று காலை 10.05 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்றும் வெளியாக இருக்கிறது.
டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.