Homeசெய்திகள்சினிமாதங்கலான், அந்தகன் படத்தை தொடர்ந்து மிரட்ட வருகிறது 'டிமான்ட்டி காலனி 2'!

தங்கலான், அந்தகன் படத்தை தொடர்ந்து மிரட்ட வருகிறது ‘டிமான்ட்டி காலனி 2’!

-

டிமான்ட்டி காலனி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தங்கலான், அந்தகன் படத்தை தொடர்ந்து மிரட்ட வருகிறது 'டிமான்ட்டி காலனி 2'!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்
டிமான்ட்டி காலனி. இந்த படத்தில் அருள்நிதி, சனந்த், ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜய் ஞானமுத்து, டிமான்ட்டி காலனி 2 படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருண் பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். அதைத்தொடர்ந்து ட்ரைலர் வெளியிடப்பட்டது.

ட்ரைலர் ரிலீஸுக்கு பிறகு டிமான்ட்டி காலனி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் இன்று மாலை 5.01 மணி அளவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ