Homeசெய்திகள்சினிமாஅருள்நிதி நடிக்கும் 'டிமான்ட்டி காலனி 2'.... ரிலீஸ் ட்ரைலர் வெளியீடு!

அருள்நிதி நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’…. ரிலீஸ் ட்ரைலர் வெளியீடு!

-

அருள்நிதி நடிக்கும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.அருள்நிதி நடிக்கும் 'டிமான்ட்டி காலனி 2'.... ரிலீஸ் ட்ரைலர் வெளியீடு!

நடிகர் அருள்நிதி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து மௌனகுரு, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, தேஜாவு, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதற்கிடையில் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்ட்டி காலனி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஹாரர் திரில்லர் படமாக வெளியான இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அருள்நிதி நடிக்கும் 'டிமான்ட்டி காலனி 2'.... ரிலீஸ் ட்ரைலர் வெளியீடு!அதைத் தொடர்ந்து தற்போது அருள்நிதி, அஜய் ஞானமுத்து கூட்டணியில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அருண் பாண்டியன், பிஜே அர்ச்சனா, முத்துக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஹரிஷ் கண்ணன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து ட்ரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மேலும் சமீபத்தில் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ