Homeசெய்திகள்தமிழ்நாடுபால் உற்பத்தியை கணினிமயமாக்கப்படும் - மனோ தங்கராஜ்

பால் உற்பத்தியை கணினிமயமாக்கப்படும் – மனோ தங்கராஜ்

-

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தலைமையேற்ற பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆவினின் மொத்த செயல்பாட்டை மின் ஆளுமைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு மாவட்ட அலுவலர்களுக்கும் தனித்தனி மின் அஞ்சல் உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார்.

பால் உற்பத்தியை கணினிமயமாக்கப்படும் - மனோ தங்கராஜ்பால் விலை உயர்த்தும் எண்ணம் தற்பொழுது இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

ஆவின் நிர்வாகமும் பால் வளத்துறையும் பெரிய மனித வளம் கொண்ட அமைப்பு எனக் குறிப்பிட்ட அமைச்சர், இதில் உள்ள ஒவ்வொரு பணியாளர்களுக்கும் துறை சார்ந்த பல கோரிக்கைகள் இருப்பதாகவும் அதை ஏற்று, இந்த ஆண்டு அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 10,000 கூட்டுறவு சங்கங்கள் இருந்தாலும், பல்வேறு கிராமங்களில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பில் இல்லை என்றும் அவற்றை அரசின் கூட்டுறவு சங்கங்களுடன் இணைத்து, அரசின் திட்டங்களை முழுமையாக சேர்க்க தங்கள் துறை இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

பால் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு இல்லை என்றும் இந்தியாவிலே எங்கும் தர முடியாத குறைந்த விலைக்கு பால் விற்பனை தமிழ்நாட்டில் தான் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பால் விலை உயர்வை பொருத்தவரை நுகர்வோர் மற்றும் முதலமைச்சர் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார். ஒன்றிய அரசு ஐ.சி.யு.வில் இருப்பதால், அதற்கு ஆக்சிஜன் தருபவர்களுக்கே நிதியை அதிகரித்து வழங்கி உள்ளனர் என்று, நிதிநிலை அறிக்கை குறித்து, அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்தார்.

MUST READ