செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துத்துறை பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலம் சார்பில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். கலைஞர் கொடுத்த பென்ஷன், டிஏவை நிறுத்தியது அதிமுக எடப்பாடி ஆட்சி. அவர்களே நிறுத்தி விட்டு போனதை தற்போது அவர்களே கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இடைப்பட்ட காலத்திற்கு மொத்தமாக கொடுக்க வேண்டுமா, இல்லையா என்பதை நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் வழக்கு இருக்கிறது. பென்ஷன், டிஏ வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
தற்போது 685 பேர் பணிக்கு புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட பிறகு அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டவர்கள் விலக்கப்பட்டார்கள். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துத்துறை பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும். என இவ்வாறு அவர் பேசினார்.