Homeசெய்திகள்சினிமா'கல்வி ஒரு ஆயுதம், கல்வி ஒரு கேடயம்'.... மேடையில் நடிகர் சூர்யா பேச்சு!

‘கல்வி ஒரு ஆயுதம், கல்வி ஒரு கேடயம்’…. மேடையில் நடிகர் சூர்யா பேச்சு!

-

- Advertisement -

அகரம் தற்போது வரை 6000 மாணவ மாணவிகளின் வாழ்கையை மாற்றியுள்ளது!

பள்ளி மேலாண்மைக் குழு அழகான மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறது கல்வி ஒரு ஆயுதம். கல்வி ஒரு கேடயம். நடிகர் சூர்யா பேச்சு!'கல்வி ஒரு ஆயுதம், கல்வி ஒரு கேடயம்'.... மேடையில் நடிகர் சூர்யா பேச்சு!

நீங்கள் என்னைத்தான் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நடிகர் சிவகுமார் பேச்சு!

மணிப்பூர் மாணவி சொன்னதை நம்மால் உணர முடியுமா?. நாம் தமிழ்நாட்டில் உள்ளதால் மணிப்பூரின் நிலை தெரியவில்லை. மணிப்பூர் மாணவியின் பேச்சைக் குறிப்பிட்டு நடிகர் கார்த்தி பேச்சு!

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்கபடுத்தும் ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறகட்டளை 45-வது ஆண்டு விழா நேற்று (ஜூலை 24) சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25 மாணவ மாணவிகள் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி என மொத்தம் 26 பேருக்கு தலா ரூ. 10,000 ஊக்கதொகை வழங்கப்பட்டது. இதில் பார்வை மாற்றுத் திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்து வந்து மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது.'கல்வி ஒரு ஆயுதம், கல்வி ஒரு கேடயம்'.... மேடையில் நடிகர் சூர்யா பேச்சு!

மேலும் மூத்த ஓவிய கலைஞர் மாயா (G.R மகாதேவன்) அவர்களின் பணிகளை பாராட்டி அவருக்கு ரூ. 1,00,000 வழங்கப்பட்டது. பின்தங்கிய சமூக மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வரும் திண்டிவனம் தாய் தமிழ் பள்ளிக்கு ரூ. 1,00,000 வழங்கப்பட்டது.

மேலும், பின்தங்கிய கிராமங்களில் சிறப்பாகப் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்வில் திரைகலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் பேராசிரியர் கல்விமணி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்கள்.

நடிகர் சிவக்குமார் பேசுகையில்,

இங்குள்ள மாணவர்கள் நீங்கள் என்னைத்தான் முன்னுதாரணமாக எடுத்துகொள்ள வேண்டும். சூர்யா, கார்த்தி இருவரும் சிவகுமார் என்ற நடிகனின் பிள்ளைகள். ஆனால் நான் ஏழைத்தாயின் மகன். அப்படி தான் கஷ்டப்பட்டு படித்தேன்.

நான் பிறந்தபோதே அப்பா இல்லை, மறைந்துவிட்டார். நாங்கள் சாப்பிட அவ்வளவு கஷ்டப்பட்டோம் வெறும் சோளம் தான். பஞ்சம் போன்ற காலங்களில் அதுவும் கிடையாது. ஒட்டகம் பால் பவுடர் எடுத்துக்கொண்டுள்ளேன். பொங்கல் சோறு போட முடியாமல் என்னை ஏன் பெற்றாய்? என்று என் அம்மாவிடம் கேட்டுள்ளேன்.'கல்வி ஒரு ஆயுதம், கல்வி ஒரு கேடயம்'.... மேடையில் நடிகர் சூர்யா பேச்சு!

365 ரூபாயில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டேன். ஆனால் இப்போது கார்த்தி மகனை பிரிகேஜி படிக்க இரண்டரை லட்சம் ஆகிறது.

5 ரூபயால் அப்போது என்னால் பள்ளி மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுக்க முடியவில்லை. அதனால் 50 ஆண்டுகளாக குழுப் புகைப்படத்தை நான் பார்ப்பதே இல்லை.
ஐந்து கோடி புகைப்படங்களில் என்னுடைய முகம் உள்ளது. ஆனால் அன்று ஐந்து ரூபாய் கொடுத்து குழுப் புகைப்படம் எடுக்க முடியவில்லை.

இங்குள்ள மாணவர்கள் நாம் அனைவரும் ஒரே ரத்தம். நாம் முயற்சித்தால் இமயமலையையே தொட முடியும். கல்வியும் ஒழுக்கமும் தான் நம்மை இமயத்தில் ஏற்றும்.

நடிகர் கார்த்தி பேசுகையில்,

“பெரிய அளவில் காசுக்கு ஆசைப்படாதவராக அப்பா இருந்துள்ளார். அப்பா தொடங்கியதை 25 ஆண்டுகளுக்குப் பிறகு அகரம் கையில் எடுத்தது. முன்பு முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு விருது வழங்கினோம். பிறகு அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து முதல் மதிப்பெண் எடுத்தார்கள் என்பதையும் முக்கியமாகப் பார்க்கிறோம். மாணவர்களை நகரத்தில் வந்து படிக்க வைப்பதை நோக்கமாக வைத்திருக்கிறது அகரம். சிறிய கிராமத்தில் படிப்பவர்களுக்கு பெரிய அளவில் அறிமுகம் இருக்காது. என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால், உங்களை எதாலும் நிறுத்த முடியாது. சாதாரண மாணவனாக இருப்பது கடினமானது. அவனை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அது ரொம்ப கொடுமை. கல்வி பெரிய ஆயுதமாக உள்ளது. கல்வி குறித்தான தகவல்களை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். அதை பாப்புலர் ஆக்க வேண்டும்”.'கல்வி ஒரு ஆயுதம், கல்வி ஒரு கேடயம்'.... மேடையில் நடிகர் சூர்யா பேச்சு!

மணிப்பூர் மாணவி சொன்னதை நம்மால் உணர முடியுமா?. நாம் தமிழ்நாட்டில் உள்ளதால் மணிப்பூரின் நிலை தெரியவில்லை. படிப்பதற்கு உதவி என்று கேட்டால், தமிழ்நாட்டில் யாரும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

சக மனிதனை மதிக்க கற்றுக் கொடுப்பதுதான் கல்வி என்று என்னுடைய மகள் கூறினார்.

நடிகர் சூர்யா மேடைப்பேச்சு, “நான் தற்போது செய்துள்ள சாதனைகளை விட, நீங்கள் 17, 18 வயதில் எந்த வசதியும் இல்லாமல் எதிர்நீச்சல் போட்டு வந்துள்ளது பெரிய சாதனை. நாங்கள் செய்துள்ளதைவிட உயர்வானது.

அகரம் தற்போது வரை 6000 மாணவ மாணவிகளின் வாழ்கையை மாற்றியுள்ளது. அகரம் மூலம் படிக்கும் மாணவர்கள் சிறந்தவர்களாக இருப்பதால், நாங்களும் எந்த வித கூச்சமும் இல்லாமல் எல்லா இடங்களிலும் உதவி கேட்க முடிகிறது. பள்ளி கல்லூரி இரண்டிலும் நான் எதுவுமே சாதித்தது கிடையாது. பள்ளி மேலாண்மைக் குழு அழகான மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. கல்வி ஒரு ஆயுதம். கல்வி ஒரு கேடயம். அகரம் உங்களுடையது. எல்லோரும் ஊர் கூடி தேர் இழுப்போம்” என்றார்.

பேராசிரியர் கல்யாணி மேடையில் பேசியதாவது, மனிதர்களை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அகரம் செயல்பட்டு வருகிறது.

2001-2 கல்வியாண்டில் தமிழக அரசின் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் சராசரியாக 128 மாணவர்கள் படித்தனர். ஆனால் தற்போது அது பாதியாகக் குறைந்துள்ளதாகக் கூறினார்.

மேடையில் பேசிய மணிப்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறியதாவது, “எங்கூரில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதனால் எங்கள் ஊரில் நிறைய குழந்தைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்ல முடியாமல் வீட்டில் இருக்கிறார்கள். நல்வாய்ப்பாக நான் இங்கு வந்ததால் படித்துக் கொண்டிருக்கிறேன். எங்கள் ஊருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினார்.

MUST READ