Homeசெய்திகள்கட்டுரைஎஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?

-

- Advertisement -
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய எஸ்.எஸ். சி தேர்வுக்கு ஆர்வம் காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  

தமிழ்நாட்டு இளைஞர்களிடையே போட்டித் தேர்வு எழுதி அரசு பணிகளுக்கு செல்லக்கூடிய ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிபணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்துகிறது. இதே போல ஐபிஎஸ், ஐஏஎஸ் போன்ற அகில இந்திய பணிகளுக்கு அகில இந்திய குடிமையியல் பணி ஆணையம் மூலமாக தேர்வு நடைபெறுகிறது. இந்த போட்டி தேர்வுளை அதிக அளவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எழுதுவதோடு வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், ஒன்றிய அரசு பணிகளுக்கு தேர்வு நடத்தக்கூடிய எஸ்.எஸ்.சி என்ற ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வில் வெற்றி பெறுவதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மிக மிகக் குறைவாகவுள்ளனர்.

இது போன்ற தேர்வு நடத்தப்படுவது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதோடு இந்தி தெரிந்து இருக்கவேண்டும், வேலை கிடைத்தாலும் வெளிமாநிலத்தில் தான் வேலை பார்ககவேண்டும் என்ற தேவையற்ற அச்சம் இருப்பது தான் காரணம் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.  ஆனால் இது போன்ற அச்சம் தேவை இல்லை என்றும் மற்ற போட்டித் தேர்வுகளை போன்றது தான் இதுவும் என்கிறார் .

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?

தமிழ்நாட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, தபால் துறை, பாதுகாப்பு துறை என்று 50 க்கும் மேற்பட்ட ஒன்றிய அரசின் அலுவலகங்கள் சென்னையிலும், பிற மாவட்ட நகரங்களிலும் இருக்கிறது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் தேர்வு எழுதி வருபவர்களில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறதே தவிர தமிழர்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் இருந்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராக கூடியவர்கள் மிக எளிதாகவே எஸ்.எஸ்.சி தேர்விலும் வெற்றி பெற முடியும். பிற தேர்வுகளில் கேட்பது போன்றே 70 சதவீதம் கேள்விகள் வருவதாகவும் கணிதத்தில் சற்று பயிற்சி எடுத்துக்கொண்டால் தேர்வில் வெற்றி பெறலாம் என்கின்றனர்.

தற்போது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களிடையே ஒன்றிய அரசு பணிகளுக்கு செல்லும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மற்ற போட்டி தேர்வுகளுக்கு படிப்பது போலவே படிப்பதாகவும், கணிதத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி படிக்கும் போது கண்டிப்பாக வெற்றி பெறமுடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றும் போது அது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்,  வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் அதிகம் பணிபுரிவது குறையும் என்றும் கூறுகின்றனர்.

நான் முதல்வன் திட்டத்தில் டிஎன்பிஎஸ்சி யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது போல எல்லா நகரங்களிலும் எஸ் எஸ் சி தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும்,  தமிழில் தேர்வு எழுதுவதற்கான ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பேசுபவர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு செய்யும் முயற்சியை போல எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

MUST READ