திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கருவூர் கிராமத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் 120 பேர் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துள்ளனர். இதில் பழனிசாமி என்பவர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென கடல் அலையில் சிக்கி, இழுத்துச் செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருடன் வந்த ஊர் பொதுமக்கள் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயற்சித்தனர். இந்த முயற்சி தோல்வியடையவே உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு பழனிசாமியை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் உடனிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.