தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் திட்டம் ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றிய திட்டம்.
வட மாநிலங்களில் கல்வியைப் பற்றியோ, கல்வியால் உண்டாகும் சமூக மேம்பாடுப் பற்றியான அக்கறை, விழிப்புணர்வு என்பது இந்த நூற்றாண்டில் கூட வரவில்லை.
ஆனால் தமிழ்நாட்டில், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே இதுகுறித்து யோசித்து.. திட்டம் தீட்டி செயல்முறைக்கு கொண்டு வந்தார்கள். நீதிக்கட்சியைச் சேர்ந்த திராவிடத் தலைவர்கள்.
அதன்பின்னும் கல்விப் பயணத்தில் 5ம் வகுப்போடும் ..7ஆம் வகுப்போடும் என்று பாதியில் படிப்பைக் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை.
” எங்க பெரிய புள்ளையை அஞ்சாப்போட நிறுத்திடலாம்னு பாக்குறேன். எட்டு மைலு பஸ்ஸுல போயி படிச்சுட்டு வாரதுக்கு காசு கொட்டியா கெடக்கு?
இந்த எட்டாப்போட நின்னுடு தம்பி. போகவர இருவது மைலு தூரம். உங்ஙொய்யனாலே சைக்கிள்ள உட்டுட்டு வர்ர சிரமமா இருக்கும்ல. அப்புறம் வேலை வெட்டிக்கு எப்படி போறது..?எப்பிடி சோறு கஞ்சி குடிக்கிறது? ஏதாவது தறி பட்டறைக்கு சேர்ந்து பொழச்சிக்க.”
1980 களின் மத்தியில் இதுபோன்ற உரையாடல்களை, கவலைமிகுந்த அங்கலாய்ப்புகளை ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கட்டாயம் நாம் கேட்டிருப்போம். அனுபவித்தும் இருப்போம்.
படிக்க ஆசையிருந்தும், போக்குவரத்துக்கு செலவு செய்து படிக்க வைக்க வழியில்லாத கிராமத்துக் குடும்பங்கள் பல.!
படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு தறிபட்டறைக்கும், மெக்கானிக்கல் கடைக்கும், விவசாய கூலிக்கும், செங்கல் சூளைக்கும் வேலைக்குப் போன..
மயில்சாமிகளும், சுந்தர் பிச்சைகளும், திலகவதிகளும் எத்தனை எத்தனையோ.. யாருக்கு தெரியும்?
இந்த துக்கத்தை.. கல்வியை தொடரமுடியாத சூழலால் வந்த தேக்கத்தை,.. பிரமாண்டமாய் இடைமறித்து நின்ற இந்தச் சவாலை..
சமூக உழவனும், கல்வியின் காவலருமான கலைஞர் தன் திட்டத்தால் கல்வி நீரை மடை மாற்றி வெள்ளமாய் பாயவிட்டார்.
தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அந்த திட்டந்தான் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம். 1990 லியே வந்திருக்க வேண்டியத்திட்டம். ஆட்சிக்கலைப்பு காரணத்தினால் தள்ளிப்போய் 1997 ல் இத்திட்டம் அமுலுக்கு வந்து பயன்தர தொடங்கியது.
இந்த திட்டத்தை தொடங்கியவர் கலைஞர். ஆனால், இந்த திட்டத்தை தனது சிந்தனையில் கருவாக்கி பிரசவித்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 1989 ஆம் ஆண்டு முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற பின்பு சட்டமன்றத்தில் அவர் பேசிய கன்னிப்பேச்சில் வைத்த கோரிக்கை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பதே!
இத்திட்டத்திற்குப்பின் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட கணிசமாகக் கூடியது.
தொடந்து திமுக அரசு அமையும் போதெல்லாம் பட்டப்படிப்பு, தொழில் படிப்பு, மருத்துவப்படிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மாணவர்கள் சேர்ந்து படித்துப் பட்டதாரியானார்கள்.
சேமலையப்பன் குடும்பத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆறுதல்
I T எனப்படும் Information Technology பற்றிய எந்த அறிவும் பிற மாநிலங்களுக்கு இல்லாதபோது, கலைஞர் அதன் எதிர்காலத்தை துல்லியமாகக் கணித்து 450 கோடியில் சென்னையில் டைடல் பார்க் அமைத்து தமிழக மாணவர்களை உலகம் முழுக்கச் சென்று கோலேச்சச் செய்தார்.
கலைஞர் தொடர்ந்து அவர்தம் பிள்ளை மு.க.ஸ்டாலின் வரைக்கும் முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ் புதல்வன் திட்டம் என இந்நாள் வரைக்கும் கல்விக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.
1997ல் கலைஞர் வழங்கிய இலவச பஸ் பாஸ் திட்டத்தினால் இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று முன்னேறி இருக்கிறார்கள். தமிழ்நாடும் மாற்றம் அடைந்திருக்கிறது.