நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இவர், பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக SK23 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு புதுச்சேரி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 26) தாம்பரத்தில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆக்சன் கதைக்களத்தில் கமர்சியல் படமாக உருவாகி வரும் இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர், விக்ராந்த், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -