பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி இன்று மோத உள்ள ஆட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இந்திய நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவ்விழாவில் இந்தியர்களின் அணிவகுப்பு டேபிஸ் டென்னிஸ் வீரர் சரத் கமல், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய அணியினர் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.
இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடவுள்ள ஆட்டங்களான துப்பாக்கிச் சுடுதல்: (10 மீட்டர் பிரிவில்) இளவேனில்- சந்தீப் சிங், அர்ஜீன் பபுதா- ரமிதா ஜிண்டால் இந்தாட்டமானது இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இறுதிச்சுற்றானது மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
டென்னிஸ்; ரோகன் போபண்ணா- ஸ்ரீராம் பாலாஜி (இந்தியா), பேபியன் ரியோல்-ரோஜர் வாசெலின் (பிரான்ஸ் ஆண்கள் இரட்டைப்பிரிவு முதலாவது சுற்று) மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது.
டேபிள் டென்னிஸ்: ஹர்மீத் தேசாய் (இந்தியா), ஜாய்த் அபோயமான் (ஜோர்டான்) (ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று) இரவு 7.15 மணியளவில் நடைபெறுகிறது.
ஆக்கி: இந்தியா-நியூசிலாந்து (ஆண்கள் லீக் சுற்று) இரவு 9 மணி
குத்துச்சண்டை: பிரீத்தி பவார் (இந்தியா)- வோ தி கிம் அன் (வியட்நாம்) (பெண்கள் 54 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்று) நள்ளிரவு 12 மணியளவில் நடைபெறுகிறது.