நடிகர் சூர்யா, தனது 42வது படமான கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு தனது 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் இதில் பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அந்தமான் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. அதன் பின்னர் சமீபத்தில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு சிறை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் கார்த்திக் சுப்பராஜ், பழைய தமிழ் ஹிட் படங்களின் டைட்டிலை சூர்யா 44 படத்திற்கு டைட்டிலாக வைக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -