Homeசெய்திகள்சினிமாஎஸ்.ஜே. சூர்யாவின் போஸ்டரை வெளியிட்ட 'எல்ஐகே' படக்குழு!

எஸ்.ஜே. சூர்யாவின் போஸ்டரை வெளியிட்ட ‘எல்ஐகே’ படக்குழு!

-

- Advertisement -

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் எல்ஐகே – LIFE INSURANCE KOMPANY படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.எஸ்.ஜே. சூர்யாவின் போஸ்டரை வெளியிட்ட 'எல்ஐகே' படக்குழு!

நடிகர் எஸ் ஜே சூர்யா ஆரம்பத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹீரோவாக நடித்து தற்போது வில்லனாகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் பல பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அதன்படி கேம் சேஞ்சர், வீர தீர சூரன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க கிரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் காதல் கதை களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவின் போஸ்டரை வெளியிட்ட 'எல்ஐகே' படக்குழு!சத்யன் சூரியன் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ