ஆவடி அருகே மறுமலர்ச்சி திமுகவின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அக்கட்சியின் தொண்டர்கள் கட்சிக்கொடி ஏற்றியும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர்.
மறுமலர்ச்சி திமுகவின் 31ஆம் ஆண்டு துவக்க விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வடசென்னை மாவட்ட தலைவர் ஜீவன் மற்றும் வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ் கலந்து கொண்டு பல்வேறு பகுதிகளில் மறுமலர்ச்சி திமுகவின் கழகத்தின் கட்சி கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏழை எளியவர்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி கழகத்தின் பொறுப்பாளர்கள் சுப்பிரமணி எக்ஸ் எம் சி குணசீலன் கார்த்திக் காமேஷ் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்…