Homeசெய்திகள்தமிழ்நாடுகுமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் சரமாரி வெட்டிக்கொலை

குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் சரமாரி வெட்டிக்கொலை

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் மூவாற்றுமுகத்தில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். இவரது மனைவி உஷா ராணி .இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஜாக்சன் மனைவி உஷா ராணி திருவட்டார் பேரூராட்சி 10 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலாராக உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஜாக்சன் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவருக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைப்பினை தொடர்ந்து ஜாக்சன் அருகில் உள்ள தேவாலயம் அருகே சென்றுள்ளார். அப்போது இரண்டு பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஜாக்சனிடம் தகறாறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகறாறு முற்றவே ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் ஜாக்சனை கம்பியால் தாக்கியதுடன் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜாக்சன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த ஜாக்சனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜாக்சன் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்ற விலாங்கன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கு முன்பு ஜாக்சனுக்கும் ராஜகுமாருக்கும் இடையே தகராறு நடந்து அடிதடியாக மாறி அந்த வழக்கும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

MUST READ