Homeசெய்திகள்சினிமாதிருவண்ணாமலையில் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்த தனுஷ்!

திருவண்ணாமலையில் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்த தனுஷ்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.திருவண்ணாமலையில் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்த தனுஷ்!நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து வருவதோடு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அதேசமயம் தனது ஐம்பதாவது படமான ராயன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் தனுஷ். இந்த படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகி இருந்த இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி இரண்டு நாட்களில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்த தனுஷ்!இந்நிலையில் நடிகர் தனுஷ், தனது பெற்றோர் மற்றும் மகன்களுடன் திருவண்ணாமலைக்குசென்று அண்ணாமலையாரை மனம் உருகி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அதாவது ஆடி கிருத்திகையை முன்னிட்டு கையில் ருத்ராட்சை மாலையுடன் வழிபாடு செய்யும் தனுஷுக்கு கோயில் முக்கியஸ்தர்கள் சால்வை அணிந்து கௌரவப்படுத்தினர்.

MUST READ