Homeசெய்திகள்தமிழ்நாடுஎந்த நேரத்திலும் மேட்டூர் அணை நிரம்பலாம் - தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க...

எந்த நேரத்திலும் மேட்டூர் அணை நிரம்பலாம் – தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

-

- Advertisement -

எந்த நேரத்திலும் மேட்டூர் அணை நிரம்பலாம், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபிணி அணை இரண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனையடுத்து இரு அணைகளில் இருந்தும் காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.27 அடியில் இருந்து 116.360 அடியாக உயர்ந்துள்ளது; கர்நாடக அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,52,903 கனஅடியில் இருந்து 1,53,091 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா பாசனத்துக்காக நீர் திறப்பு விநாடிக்கு 8000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 116.36 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை இருவரும் நிலையில் மேட்டூர் அணை ஓரிரு நாட்களுக்குள் 120 அடியை எட்டிவிடும். எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். உடைமைகள் பாதுகாப்பு உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

MUST READ