நடிகர் யோகி பாபு மண்டேலா படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் காமெடி படங்களில் மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது யோகி பாபு நடிப்பில் போட் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட வெற்றி படங்களை தந்த சிம்பு தேவன் இயக்கியுள்ளார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
மகேஷ் மாணிக்கம் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சர்வைவல் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் யோகிபாபு உடன் இணைந்து கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர், மதுமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் திரையிடப்பட இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. இந்நிலையில் ஈரம் மற்றும் சப்தம் ஆகிய படங்களை இயக்குனர் அறிவழகன் போட் திரைப்படம் குறித்த தன்னுடைய விமர்சனத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Wow! Experienced #Boat Movie and I can say it’s one of his best work of Dir @chimbu_deven Bro in handling the political satire in a single boat with many versatile characters that also reflects d current scenario too. In a single quote , I can say “Read the Political India &…
— Arivazhagan (@dirarivazhagan) July 29, 2024
அந்த பதிவில், “இயக்குனர் சிம்பு தேவனின் சிறந்த படைப்புகளில் போட் திரைப்படமும் ஒன்று ஏன்னா என்னால் சொல்ல முடியும். அரசியல் நையாண்டியை ஒரே படத்தில் பல பல்துறை கதாபாத்திரங்களுடன் கையால்வது தற்போதைய சூழ்நிலையையும் பிரதிபலிக்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், “இந்திய அரசியலை படியுங்கள், போட் படத்தை பாருங்கள் அல்லது போட் படத்தை பாருங்கள் இந்திய அரசியலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள். போட் படம் வெற்றியின் கரையை அடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.