Homeசெய்திகள்க்ரைம் ஏடிஜிபி அறையில் தீ விபத்து

 ஏடிஜிபி அறையில் தீ விபத்து

-

- Advertisement -

எழும்பூரி ல் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அருகே உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி அறையில் தீ விபத்து.

 ஏடிஜிபி அறையில் தீ விபத்துஏசியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசம்.  அறையில் ஏடிஜிபி இல்லாததால் சேதம் தவிர்ப்பு.

சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகம் அருகே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கும் பணியானது நடக்கும்.

இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் இக்கட்டிடத்தின் நான்கு மாடியில் அமைந்துள்ள ஏடிஜிபி கல்பனா தீ விபத்து திடீரென தீவிபத்தானது ஏற்பட்டது. கரும் புகையுடன் கிளம்பிய தீயானது மளமளவென எரிந்ததால் கட்டிடத்தில் இருந்த அனைவரும் பதறி அடித்து கீழே ஓடி வந்தனர்.

உடனடியாக இந்த தீவிபத்து குறித்து எழும்பூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயானது அறை முழுவதுமாக பரவி அங்கிருந்த சோபாக்கள், நாற்காலிகள், ஆவணங்கள் ஆகியவை எரிந்து சேதமாகியது. சுமார் அரை மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவி வந்த நிலையில், தீ விபத்து குறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் இருந்த ஏசியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அறை முழுவதுமாக எரிந்தது தெரிய வந்தது. ஏ டி ஜி பி வேறொரு வேலை சம்பந்தமாக அலுவலகத்திற்கு வராததால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும் தேர்வு சம்பந்தமான ஏதேனும் முக்கிய ஆவணங்கள் அறையில் தீயில் கருகியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ