2006 பேருக்கு ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான மத்திய அரசு வேலை. ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 2006 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைனில் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு ஆகஸ்ட் 27, 28 -ல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படும் இந்தத் தேர்வு நடைபெற இருக்கிறது.
12ம் வகுப்பு படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்கின்ற முறை
• Computer Based Examination
- Skill Test in Stenography & Certificate Verification
அதிகபட்ச வயது வரம்பு தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) –10 years, PwBD (OBC) – 10 years
ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ பணிக்கு 18 முதல் 30 வயதுடையவர்களும், கிரேடு ‘டி’ பணிக்கு 18 வயது முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு
இந்தப் பணிக்கு பார்வையற்றோர், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், காது கேளாதோர், கை, கால்களை இழந்தவர்கள், முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பிரச்சனை உள்ளவர்கள், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ssc.gov.in எனும் இணையதளப் பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
விண்ணப்ப கட்டணம்
Women/ ST/SC/Ex-service/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு மையங்கள்
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.