Homeசெய்திகள்இந்தியாவயநாடு நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி - ராகுல் காந்தி இரங்கல்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி – ராகுல் காந்தி இரங்கல்

-

- Advertisement -

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்,

கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சூரல் மலை பகுதியில் பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 500 குடும்பங்கள் அங்கு சிக்கி அதில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்காக தற்போது கேரள மாநிலத்தின் உடைய தீயணைப்பு துறையினர் பலர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதே போல தேசிய பேரிடர் மீட்பு படையும் அங்கு விரைந்து சென்று கொண்டுள்ளனர். மேலும் ராணுவத்தின் உதவியும் அங்கு நாடப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக சூலூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் உதவியும் கோரப்பட்டுள்ளது.

இந்த பயங்கர நிலச்சரிவில் தற்போது வரை 41 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 400 குடும்பங்கள் தனிமைபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பாலம் அடித்துச் செல்லப்பட்டதாலும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாகியுள்ளது.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் (வயநாடு) எம்.பி., ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ