spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவயநாடு நிலச்சரிவு - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு

-

- Advertisement -
kadalkanni

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் அதிகாலை 2 மணியளவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இதில் சூரல் மலை பகுதியில் பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 500 குடும்பங்கள் அங்கு சிக்கி அதில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்காக தற்போது கேரள மாநிலத்தின் உடைய தீயணைப்பு துறையினர் பலர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதே போல தேசிய பேரிடர் மீட்பு படையும் அங்கு விரைந்து சென்று கொண்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகளுக்காக கண்ணூரில் இருந்து ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு – இபிஎஸ் இரங்கல்

இந்த பயங்கர நிலச்சரிவில் தற்போது வரை 54 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 250 குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் பாலம் அடித்துச் செல்லப்பட்டதாலும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாகியுள்ளது. மேலும் ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

MUST READ