Homeசெய்திகள்க்ரைம்ஆணவக் கொலை செய்தவர்கள் மீது உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் - எம். எச். ஜவாஹிருல்லா

ஆணவக் கொலை செய்தவர்கள் மீது உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் – எம். எச். ஜவாஹிருல்லா

-

- Advertisement -

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

ஆணவக் கொலை செய்தவர்கள் மீது உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் - எம். எச். ஜவாஹிருல்லாதர்மபுரி வி.ஜெட்டி அள்ளி பகுதியில் பிரபலமான பிரியாணி கடையில்  பணியாற்றிக் கொண்டிருந்த முகமது ஆசிப்பைக் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரவு கடையில் திடீரென புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியும் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர்.

 

அந்த கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  கொலைக்கான காரணமாக முகமது ஆசிப் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

 

கொலை சம்பவத்திற்கு முன்பு ஆசிப் குடும்பத்தினரை அப்பெண்ணின் உறவினர்கள் தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளனர். இது ஒரு அப்பட்டமான ஆணவக் கொலை என்பது இதன் வாயிலாகப் புலனாகிறது. காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்திருந்தாலும் இது அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமையும் வகையில் உட்சபட்ச தண்டனை அப்பெண்ணின் தந்தை உட்படக் கொலையாளிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள் தண்டனை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஆணவக் கொலைகளை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிப்பதற்குத் தனிச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டுமென்பதை இந்த ஆணவப் படுகொலை மீண்டும் உணர்த்தியுள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணவக் கொலைகள் குறித்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

 

ஆணவக் கொலைக்கு இலக்கான குடும்பத்தினருக்கு கருணையுள்ளமுள்ள முதலமைச்சர் நிவாரண தொகையும் அவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

MUST READ