Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைந்த ராட்சசன் படக் கூட்டணி... இறுதிக்கட்டத்தை நெருங்கிய படப்பிடிப்பு!

மீண்டும் இணைந்த ராட்சசன் படக் கூட்டணி… இறுதிக்கட்டத்தை நெருங்கிய படப்பிடிப்பு!

-

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மீண்டும் இணைந்த ராட்சசன் படக் கூட்டணி... இறுதிக்கட்டத்தை நெருங்கிய படப்பிடிப்பு!அதே சமயம் இவர் ஆர்யன், மோகன்தாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ஓர் மாம்பழ சீசனில் போன்ற படங்களிலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.மீண்டும் இணைந்த ராட்சசன் படக் கூட்டணி... இறுதிக்கட்டத்தை நெருங்கிய படப்பிடிப்பு! இந்த படமானது விஷ்ணு விஷாலின் 21 வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டிலேயே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு கொடைக்கானல் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து பிரேமலு பட நாயகி மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீண்டும் இணைந்த ராட்சசன் படக் கூட்டணி... இறுதிக்கட்டத்தை நெருங்கிய படப்பிடிப்பு!VV21 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படமானது இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ