ஆவடி பட்டாபிராமில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கலை கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்.
ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள இம்மானுவேல்
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் மாணவ மாணவிகள் தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக செயலாக்கப்பட்ட அறிவியல்,கலை, விஞ்ஞானம், இயற்கை பாதுகாப்பு, மருத்துவம், விலங்கின பாதுகாப்பு,கணித கோட்பாடு உட்பட நூற்றுக்கணக்கான விஞ்ஞானம் சார்ந்த கண்காட்சி இடம்பெற்றன.
இந்நிகழ்வை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பெற்றோர்களும் பார்த்து ரசித்து பாராட்டி சென்றனர்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
கண்காட்சியில் விஞ்ஞானத்தில் வித்தியாசமான முறையில் திறமைகளை வெளிப்படுத்திருந்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து பள்ளி முதல்வர் வசந்தா பீட்டர் கூறியது, ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களுடைய திறனை வளர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுவதாகவும் மாணவர்கள் மத்தியில் அறிவியல் வளர்ச்சியை வளர்ப்பதற்காகவும் புதிய ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் விதமாக இந்த கண்காட்சியை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பாக ஆண்டுதோறும் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.