கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் 2000ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு சில மலையாள படங்களில் நடித்து வந்த இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் என பல முன்னாடி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி தற்போது உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். இவர் மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் தவிர எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அசத்தலான ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையிடப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.