முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், இன்று கடைசியாக காவல் உடை அணிகிறேன் என்று பேசி கண்கலங்கினார்.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கான பிரிவுபச்சார நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த பிரிவுபச்சார விழாவில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி ஷீமா அகர்வால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், 1990 ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து 34 ஆண்டுகள் பணியாற்றி இன்று ஓய்வு பெறுகிறேன். என்னுடைய தாத்தா பெருமாள் அவர்கள் காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றினார்.
எனது தந்தை அய்யாசாமி காவல் உதவி ஆய்வாளராக சேர்ந்து காவல் கண்காணிப்பாளராக உயர்வு பெற்றார்.
34 ஆண்டுகளில் எனது பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளேன். எனக்கு பக்கபலமாக இருந்த என் மனைவி சீமா அகர்வால்(DGP) க்கு நன்றி. மேலும்
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்ததில் பெருமை கொள்கிறேன்.
இன்று கடைசியாக காவல் உடையை அணிகிறேன். இன்று கண் கலங்கினேன். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதிலும் நான் காவல் பணியிலேயே இருப்பேன்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
காவல் நிலையத்துக்கு வரும் நபர்களின் துன்பம் பிரச்சனை அவர்களுக்கு பெரியது. அதனை நாம் சிறப்பாக கையாண்டு அவர்களுக்கு நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அப்போது அவர்கள் முகத்தில் எழும் சந்தோஷம் தான் நமக்கான வெகுமதி என்று அவர் தெரிவித்தார்.