Homeசெய்திகள்விளையாட்டுபாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி - காலிறுதிக்கு தகுதிபெற்ற இந்திய அணி

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி – காலிறுதிக்கு தகுதிபெற்ற இந்திய அணி

-

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி லிக் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் 2-1 என்ற
கோல் கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி, புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதிபெற்றது.

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி லிக் குருப் பி பிரிவில் நடைபெற்ற போட்டியில்
இந்திய அணி, நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணியுடன் மோதியது.
இந்த போட்டியின் 18.வது நிமிடத்தில் இந்தியாவின் அபிஷேக் கோல் அடித்து
அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார். இந்த நிலையில், ங
போட்டியின் 2வது பாதியில் 33வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ங
திபியு ஸ்டாக்புரோக்ஸ் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.
பின்னர் 44வது நிமிடத்தில் அந்த அணியின் ஜான் டோமென் மற்றொரு கோல்
அடிக்க போட்டியில் 2.-1 என பெல்ஜியம் முன்னி லை பெற்றது.

7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்!
File photo

பின்னர் இந்திய அணி வீரர்கள் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள்
பலனளிக்காத நிலையில் 2.-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி
பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. போட்டியில் தோற்றபோதும் புள்ளிக்
கணக்கில் 2ம் இடம் பிடித்த இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதி
போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

MUST READ