Homeசெய்திகள்சென்னைசென்னையில் இருந்து வங்கதேசத்திற்கு புதிய விமான சேவை- பயணிகள் மகிழ்ச்சி

சென்னையில் இருந்து வங்கதேசத்திற்கு புதிய விமான சேவை- பயணிகள் மகிழ்ச்சி

-

சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு, குறைந்த கட்டணத்தில், நேரடி விமான சேவையை, வரும் செப்டம்பர் மூன்றாம் தேதியில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்குகிறது.

சென்னையில் இருந்து வங்கதேசத்திற்கு புதிய விமான சேவை- பயணிகள் மகிழ்ச்சிசென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு, நேரடி விமானங்கள் ஏற்கனவே, இண்டிகோ ஏர்லைன்ஸ், பங்களா ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து டாக்காவிற்கு நேரடி விமான சேவையை, அடுத்த மாதம், வரும் செப்டம்பர் மூன்றாம் தேதியில் இருந்து தொடங்குகிறது. இந்த விமானம் திங்கள் கிழமை தவிர, வாரத்தின் மற்ற ஆறு நாட்களில், செவ்வாயிலிருந்து ஞாயிறு வரையில் தினமும் இயக்கப்படுகிறது.

சென்னையில் இரவு 7 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு, இரவு 10.10 மணிக்கு சென்றடைகிறது. அதைப்போல் வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து மதியம் புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 4.50 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்கிறது.

இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில், மற்ற விமானங்களை விட பயணக் கட்டணம் குறைவு என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து டாக்காவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கட்டணம் ரூ.5,000. அதே நேரத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்து எடுத்தால், ரூ.4,796.
அதேபோல் டாக்காவில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.7,400. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்து எடுத்தால், ரூ.7,223 என்று அந்த நிறுவனம் அதிரடி கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமானவர்கள், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு, விமானங்களில் வருகின்றனர். அதைப்போல் தமிழ்நாடு உட்பட இந்திய மாணவர்கள் பலர், உயர்கல்விக்காக, வங்கதேசம் செல்கின்றனர். அவர்களுக்கு இந்த குறைந்த கட்டண விமான சேவைகள் வசதியாக இருக்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

MUST READ