Homeசெய்திகள்சினிமாவயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன் - விக்கி தம்பதி!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன் – விக்கி தம்பதி!

-

- Advertisement -

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது.வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன் - விக்கி தம்பதி!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் கிட்டத்தட்ட 300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் இந்த ஒரு செய்தி இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. தீயணைப்பு படையினர், தேசியப் பேரிடர் பாதுகாப்பு மீட்பு படையினர்போன்றோர்
இந்த இயற்கை பேரிடரில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். பல குடும்பங்கள் வீடுகளை இழந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன் - விக்கி தம்பதி!அந்த வகையில் ஏற்கனவே நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சமும், சூர்யா- கார்த்தி- ஜோதிகா ஆகிய மூவரும் இணைந்து ரூ. 50 லட்சமும், நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ. 10 லட்சமும் நிவாரண நிதி வழங்கினர். அவர்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா தம்பதி ரூ. 20 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளனர். இதனை நயன் – விக்கி தம்பதி தங்களின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர்.

MUST READ