Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் ஹாக்கி- ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி!

ஒலிம்பிக் ஹாக்கி- ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி!

-

- Advertisement -

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை 3- 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி தொடரில் பி பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுன் மோதியது. போட்டியின் 18வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் பீல்டு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனை தொடர்ந்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்!
File photo

பின்னர் போட்டியின் 25-வது நிமிடத்தில் ஆஸி. வீரர் கிரெய் கோல் அடித்தார். தொடர்ந்து, 32வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங் மேலும் ஒரு கோல் அடித்ததால் இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து 55வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி மற்றொரு கோல் அடித்தது. பின்னர் அந்த அணி கோல் அடிக்க முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

மேலும், 52 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ,இந்திய அணி வரலாறு படைத்தது. இந்த வெற்றியால் பி பிரிவில் 2வது இடம் பிடித்த இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

 

 

 

MUST READ