Homeசெய்திகள்சென்னைபுனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

சென்னை அண்ணா மேம்பாலம் ‘பொன்விழா ஆண்டையொட்டி 10 கோடியே 85 லட்சம் மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

சென்னையில் கடந்த 1973ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரால் அண்ணா மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணா மேம்பாலத்தின் பொன்விழா ஆண்டையொட்டி 10 கோடியே 85 லட்சம் மதிப்பிட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதில் பாலத் தூண்கள் ஜிஆர்சி பேனல்கள் கொண்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.பாலத்தின் அடியில் அழகு செடிகள், ஒளிரும் மின்விளக்குகள், செயற்கை நீருற்று உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து புதுப்பொலிவோடு காட்சியளிக்கும் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா, தலைமை செயலாளர் சிவதாஸ் மினா, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

MUST READ