Homeசெய்திகள்க்ரைம்பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

-

- Advertisement -

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேணுமலப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெட்ரோல் பங்குகளில் மர்ம நபர்கள் சிலர் கிரெடிட் கார்டுகளை கொண்டு வந்த அவசர பணிக்காக மருத்துவமனைக்கு பணம் வேண்டும் என்றும் கார்ட் ஸ்வைப் செய்து பணம் கொடுத்தால் 2 சதவீதம் கமிஷன் தருவதாக கூறுகின்றனர்.

பின்னர் ஸ்வைப்பிங் இயந்திரத்தில் உள்ள வொயிட் எனும் ஆப்ஷனை அழுத்தி விடுகின்றனர். இதனால் முதலில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் முன்னிலையில் கார்டில் இருந்து பணம் வந்தது போல் காண்பித்தாலும் இவர்கள் அழுத்திய வொயிட் ஆப்ஷனை கவனிக்காததால் மீண்டும் அந்த பணம் அவர்கள் வங்கி கணக்கிற்கே சென்று விடும். இதனை அறியாமல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பணத்தை கொடுத்து வந்துள்ளனர். மாலை பணி முடித்து செல்லும் போது கணக்கு பார்த்தால் அந்த பணம் குறைவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வந்தனர்.

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

இதுபோன்று 7 பெட்ரோல் பங்கில் இருந்து போலீசாருக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து மிரியாலகுடா டிஎஸ்பி ராஜசேகர் ராஜு தலைமையில் இந்த மோசடியில் ஈடுப்பட்டவர்களை பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி கேமிரா காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.

இதனையடுத்து ஒரு பெட்ரோல் பங்கில் கிரெடிட் கார்டு கொடுத்து பணம் பெற முயன்றபோது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த சீனிவாச ராவ், சிவா, சித்தார்த் ரெட்டி, ரவி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

இவர்களிடம் நடத்திய விசாரனையில் சீனிவாசராவ், சிவா ஆகியோர் பல்நாடு மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில் இதற்கு முன்பு வேலை பார்த்து ஸ்வைப்பிங் மிஷன் குறித்தம் அதில் உள்ள ஆப்ஷன்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டனர். எனவே இதனை வைத்து மோசடி செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டு மிரியாலகுடாவில் 7 பெட்ரோல் பங்கில் மோசடி செய்து விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்து பின்னர் அந்த மாவட்ட போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

MUST READ