மத்திய பிரதேச மாநிலத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழ பெய்தது. இந்த நிலையில், ஷாபூர் பகுதியில் உள்ள ஹர்தவுல் பாபா கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். காலை 8.30 மணி அளவில் மழை காரணமாக கோவிலின் அருகே இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். போலிசாரின் விசாரணையில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான வீடு, கனமழையால் இடிந்து விழுந்தது தெரியவந்தது.
இந்த விபத்தில் 9 சிறுவர் சிறுமிகள் பலியனாதற்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.