spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுயானை மிதித்து விவசாயி பலி

யானை மிதித்து விவசாயி பலி

-

- Advertisement -
kadalkanni

போடி அருகே தமிழக கேரளா எல்லையில் உள்ள மலைச்சாலையில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள பாப்பன் பாறை, உடும்பன் சோலை நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தனியார் ஏலத்தோட்ட பணிகளுக்கு நாள்தோறும்  விவசாய கூலி தொழிலாளர்கள் நடை பயணமாக சாக்கலுத்து மெட்டு சாலையை பயன்படுத்தி அடர்ந்த வனப்பகுதி சாலையின் வழியாக  கேரள மாநிலத்திற்கு சென்று விவசாய கூலி பணிகளை செய்து முடித்துவிட்டு திரும்பி வருவது வழக்கம்.

இந்நிலையில்  வழக்கம் போல் கேரள மாநிலத்திற்கு கூலி வேலை செய்வதற்காக தேவாரம் சாலைத் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ரெங்கசாமி 70என்பவர் பணி செய்வதற்காக சென்று உள்ளார்.

அப்போது கழுதை மூக்கு பகுதியில்  சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மக்னாயானை ஒன்று அவர் எதிரே வந்து தாக்கியதில்  படுகாயம் அடைந்துள்ளார். மேலும் காலால் மிதித்து தாக்கியதில்ரெங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதே சாலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு பின்னால் சென்ற கூலித் தொழிலாளர்கள் யானை தாக்கி அவர் உயிரிழந்து கிடப்பதை பார்த்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் கான்வாய் பாதையில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி

அதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாள்தோறும் நடைபயணமாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று வந்த கூலித் தொழிலாளி யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரிதும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.

தமிழக கேரளாவை இணைக்கும் மிகக் குறுகிய சாலையான இந்த சாக்குலுத்து மெட்டு சாலையை சீரமைத்து நாள்தோறும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் வாகனங்களில் பணிக்கு சென்று வர அரசு நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

MUST READ