Homeசெய்திகள்தமிழ்நாடுமுசிறி காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்

முசிறி காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்

-

- Advertisement -

முசிறி காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்
தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயமாகியுள்ளார், காப்பாற்ற முயன்ற நண்பன் நடு ஆற்றில் தத்தளித்த போது மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே , தொட்டியம் காவிரி ஆற்றில் குளித்த போது ஆற்றில் மாயமான வாலிபரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். மாயமான வாலிபருடன் தண்ணீரில் மூழ்கிய அவரது நண்பர் கரையேறி உயிர் தப்பிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டி நடு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவரது நண்பர் மாதேஷ் (30). இருவரும் டிரைவராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் மூன்று நண்பர்கள் சேர்த்து 5 பேர் நத்தம் முல்லைநகர் அருகே உள்ள காவிரி ஆற்றில் நேற்று மாலை 6 மணியளவில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மாதேஷ் காவிரி ஆற்று தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த பிரகாஷ் நண்பன் மாதேஷை காப்பாற்றுவதற்காக ஆற்றில் போராடியுள்ளார்.

முசிறி காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்

அவர்கள் குளித்த இடம் ஆழமாக இருந்ததால் தண்ணீரின் வேகத்தில் ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி உள்ளார் என கூறப்படுகிறது. அப்போது மாதேஷ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். காப்பாற்ற போராடிய பிரகாஷ் ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே அவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. ஓரளவு நன்கு நீச்சல் பழகியவர் என்பதால் பிரகாஷ் தண்ணீரின் போக்கிலேயே சென்று ஒரு சிறு மணல் திட்டில் ஏறி தப்பியுள்ளார்.

களைப்பில் சுமார் அரை மணி நேரம் மணல் திட்டிலேயே படுத்திருந்தவர் பின்னர் எந்த திசையில் செல்வது, ஆற்றில் எங்கு ஆழம் உள்ளது என தெரியாமல் அச்சத்தில் நின்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை மூவரும் அப்பகுதியில் இருந்தவர்களிடம் கூறி உதவி கேட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கும், முசிறி தீயணைப்பு நிலைய மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் கான்வாய் பாதையில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி

சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, காட்டுப்புத்தூர் போலீசார் மற்றும் மீட்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி மாயமான இருவரையும் தேடத் தொடங்கினர். இதில் பிரகாஷ் டார்ச் லைட் வெளிச்சத்தை பார்த்து சத்தம்போட்டு உதவி கேட்டுள்ளார். இதையடுத்து மீட்பு படையினர் பிரகாசை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.

மேலும் ஆற்றில் மாயமான மாதேசை மீட்பு படையினர் தேடினர். போதிய வெளிச்சம் இல்லாததாலும், இரவு நேரம் ஆகிவிட்டதால் மீட்பு படையினர் கரை திரும்பினர். மீட்பு படையினர் இன்று மீண்டும் ஆற்றில் இறங்கி மாயமான வாலிபரை தேட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ