உலக டிராபிக் சிக்னல் தினத்தையொட்டி தலைநகர் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல் விளக்குகள் இதய வடிவில் ஒளிர்ந்தன.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 110 வருடங்களுக்கு முன்பு 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகின் முதல் டிராபிக் சிக்னல் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, நாம் தற்போது பயன்படுத்தி வரும் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறத்திலான டிராபிக் சிக்னல் அமைப்பை டெட்ராய்ட் காவல்துறை அதிகாரியான வில்லியம் பாட்ஸ் என்பவர் கடந்த 1920 ஆம் ஆண்டு உருவாக்கினார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் முதன் முறையாக டிராபிக் சிக்னல் பயன்பாட்டிற்கு வந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வதேச டிராபிக் சிக்னல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலகம் முழுவதும் டிராபிக் சிக்னல் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், சென்னை நகரில் உள்ள சிக்னல் லைட்டுகள் இதய வடியில் ஒளிர்ந்தன. இதனை வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.