விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். வெற்றிகரமாக ஏழு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது தான் இதற்கு அடையாளம் என்று சொல்லலாம். அதாவது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விரும்பாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதேசமயம் சீரியல்களை விட டிஆர்பியில் நம்பர் 1 ஆக இருக்கும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் சண்டை, கலேபரங்கள் என அனைத்தும் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. அதேசமயம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் அவர்களைத் தேடி பட வாய்ப்புகள் குவியும். இதனால் பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல விரும்புவர். இந்நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன் கடந்த ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது திடீரென அடுத்த சீசனை தான் தொகுத்து வழங்கவில்லை என அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கமல்ஹாசனுக்கு பதிலாக வேறு யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்? அடுத்த ஹோஸ்ட் யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எனவே பலரும் கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி ஆகிய பிரபலங்களில் யாரேனும் ஒருவர் பிக் பாஸ் சீசன் 8 ஐ தொகுத்து வழங்குவார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் சீசன் 8 ஐ தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே கமல்ஹாசன் உடல் நலம் சரியில்லாத போது ஒரே ஒரு எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -