Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பலவிதமான நோய்களுக்கு மருந்தாகும் தனியா பத்தியக் குழம்பு!

பலவிதமான நோய்களுக்கு மருந்தாகும் தனியா பத்தியக் குழம்பு!

-

தனியா பத்தியக் குழம்பு செய்வது எப்படி?பலவிதமான நோய்களுக்கு மருந்தாகும் தனியா பத்தியக் குழம்பு!

தேவையான பொருள்கள்

தனியா – 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
எள்ளு – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
புளி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக வறுத்து வைத்துள்ள பொருட்களை எல்லாம் ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.

அதேசமயம் புளியை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பலவிதமான நோய்களுக்கு மருந்தாகும் தனியா பத்தியக் குழம்பு!

இப்போது அடி கனமான பாத்திரத்தில் புளி கரைசலை சேர்த்து கொதித்து வந்ததும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், எள்ளு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து கலக்கி கொதிக்க விட வேண்டும்.

மேலும் குழம்பு கொதித்து கெட்டியாகி வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி விடவும். அதைத் தொடர்ந்து மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை ஆகிவற்றை தாளித்துக் குழம்பில் ஊற்ற வேண்டும்.

இப்போது அருமையான தனியா பத்திய குழம்பு தயார். இந்த குழம்பினை சாதம் இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த குழம்பில் அதிக அளவில் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.பலவிதமான நோய்களுக்கு மருந்தாகும் தனியா பத்தியக் குழம்பு!

தனியா விதை பொதுவாக வாயு பிரச்சனை, இருமல், சளி, பித்தம், தலைவலி, இரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. எனவே இதுபோன்று குழம்பு செய்து சாப்பிடுவதனால் வயிற்று வலி, வயிற்றுப்புண் ஆகியவை குணமடைவதோடு மலச்சிக்களும் தீரும்.

MUST READ